முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில்   செவ்வாய்க்கிழமை (27.01.2026) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான முல்லைத்தீவு துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்பப் பாடசாலை உதவிக்கல்விப் பணிப்பாளர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (வயது-53)  என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் பழைய கொலணிப் பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரைத் தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த ஜோர்ஜ் உட்பட 5 மாணவர்களைக் குறித்த குளவிகள் கொட்டியுள்ளது.

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அதில் கடுமையாகத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த ஜோர்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குளவிக் கொட்டுத் தாக்குதலுக்குள்ளான ஐந்து பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.