பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02.15 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 23 ஆண்கள், 12 பெண்கள் என 35 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கியவர்களை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.