அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சை
Ad Space
Ad Space
Ad Space
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸ் மா அதிபரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.அநுராதபுரம் மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்ச்சி கூட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த கூட்டத்தில் உரை நிகழ்த்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' அமைப்பு உட்பட சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.குறித்த பேரணியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட கருத்தே இந்த பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஒப்பீட்டு ரீதியாகக் குறிப்பிட்டு உரையாற்றும் போது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன்னை ஒரு 'புலி' என்றும், ஜனாதிபதியை 'நரி' என்றும் விமர்சித்திருந்தார்.விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பிலான எந்தவொரு குறிப்பையும் நீண்டகாலமாக விமர்சித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மத்தியிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் முன்னிலையிலும் மேடையில் விடுதலைப் புலிகளின் பெயர் குறிப்பிடப்பிட்டுள்ளார்இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இதுவரை தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள சூழலில், பொதுமேடையில் அவ்வாறான கருத்துக்கள் பகிரப்பட்டமை நாட்டின் சட்டத்துக்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space