யாழ். வடமராட்சி கிழக்குத் தாளையடிக் கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான இளைஞன் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (30.12.2025) அதிகாலை தாளையடிக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) பிற்பகல் இரு நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காகத் தாளையடிக் கடலுக்குச் சென்றுள்ளார். காற்றின் அதிகரிப்பால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் ஆழமான பகுதி நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன இளைஞன் தொடர்ச்சியாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரது சடலம் தாளையடிக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு ஆழியவளைப் பகுதியைச் சேர்ந்த வி.ஜெசிந்தன் (வயது-26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வடமராட்சி கிழக்கு தாளையடிக் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space