மறைந்த யாழ் இந்து கல்ல்லூரி அதிபர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் எமது மண்ணில் சிறந்த கல்விக் கலாச்சாரம் உறுதிசெய்யப்படவேண்டும் என்பதில் உறுதியுடன் பணியாற்றியவர். அவரின் சிந்தனைகள் செயற்பாடுகளை நாம் என்றும் பின்தொடரவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
அதிபரும் கல்வியலாளருமான பங்சலிங்கம் அவர்களது இறுதி அஞ்சலிக் கூட்டம் உரும்பிராயில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. அதில் இறுதி அஞ்சலி உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், எமது மண்ணின் கல்விப் பாரம்பரியத்தில் அதிபர்களின் பங்கு வரலாற்று ரீதியில் பார்க்கப்படவேண்டியது. அந்த வகையில் தேசியப் பற்றமிகுந்ததும் சுதேசப் பண்பு மிகுந்ததுமான யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி போன்ற புகழ்பூத்த கல்லூரிகளில் மறைந்த அதிபர் பஞ்சலிங்கம் அவர்கள் தனது அர்ப்பணிப்பு மிக்க சேவையினை நிலைநாட்டியுள்ளார்.
அவ்h கல்வி என்பதற்கு அப்பால் எமது சமுதாயம் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற உயரிய நோக்கில் மனித நேயம் மிக்க சகூக சேவையாளராக மக்கள் பணியாற்றியுள்ளார். எமது இளைய தலைமுறையினர் கல்வி ஊடாக ஓர் பண்புள்ள எதிர்காலத் தலைமுறையினராக மிளிர வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பெருமனாக தனது வாழ்வியல் கால ஓட்டத்தினை நிறைவு செய்துள்ளார். எமது தாயகத்தில் ஓர் கல்வியலாளரை நல்ல சிந்தனையாளரை செயற்பாட்டாளரை மக்கள் நேயப் பண்பாளரை இழந்து நிற்கின்றோம்.
அவரது இழப்பு உரும்பிராய் மண்ணுக்கானது மட்டுமல்ல. அவரின் சிந்தனையினாலும் செயற்பாட்டினாலும் வழிநடத்தப்பட்ட பலரையும் பாதித்துள்ளது.
இந் நிலையில் எமது உள்ளுராட்சி மன்றம் சார்பிலம் எமது மக்கள் சார்பிலும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் பிரிவையொட்டித் தெரிவித்துக் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலிக்கூட்ட உரையில் தெரிவித்தார்.
அதிபர் பஞ்சலிங்கம் அவர்கள் கல்வி அபிவிருத்தியினால் சமூகத்தினை முன்னேற்றுவதற்காக உழைத்தவர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space