வடக்கு சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
வட மாகாண சுகாதாரச் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 350 சுகாதார உதவியாளர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (18) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.மத்திய அரசின் வழிகாட்டலில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 45 சுகாதார உதவியாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், 5 பேர் யாழ்ப்பாணம் தாதியர் பாடசாலையில் இணைக்கப்படவுள்ளனர்.அத்துடன், வட மாகாண சபையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 300 பேர் மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளனர்.இலவச சுகாதாரச் சேவையின் தரத்தை உயர்த்தவும், நோயாளி பராமரிப்புச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக, மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1,860 சுகாதார உதவியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் செல்லதம்பி திலகநாதன், வட மாகாண பிரதம செயலாளர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space