மிதக்கும் சூரிய மின் நிலையம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பு!
Ad Space
Ad Space
புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவாட் (MW) கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் நினைவுப் பலகையைத் திறந்து வைத்து இத்திட்டத்தை நாட்டுக்குக் கையளித்தார். தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
Ad Space
Ad Space