பேலியகொடை தொரண சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பேலியகொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களும் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 36 மற்றும் 47 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மசாஜ் சேவை என கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space