மறைந்த புகழ்பெற்ற வயலின் வித்துவான் பேராசிரியர்.வி.லக்சுமிநாராயணாவின் நினைவாக யாழ்.மருதனார்மடத்திலுள்ள வட இலங்கைச் சங்கீத சபைக்கு முன்பாகவுள்ள வீதிக்குப் பெயர் சூட்டப்பட்டு வியாழக்கிழமை (23.07.2026) பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்.ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து வருகை தந்த அன்னாரின் புதல்வரும், உலகப் புகழ்பெற்ற இசை மேதையுமான கலாநிதி.ல.சுப்பிரமணியம் நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டு பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார். வீதி திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து வட இலங்கைச் சங்கீத சபை மண்டபத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றன.