மொரட்டுவை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில், புதையல் என சந்தேகிக்கப்படும் கருங்கல்லால் செய்யப்பட்ட மூன்று வெவ்வேறு வடிவ பொருட்களை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் 41 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், கல்கிசை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.