வங்கி கணக்கு ஒன்று தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் செவ்வாய்க்கிழமை (27) முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனிப்பட்ட விடயம் காரணமாக பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (27) முன்னிலையாக முடியாது என மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ உத்தியோகபூர்வ கடிதம் மூலம் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா காவல் துறை நிதி குற்றவியல் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது - மகிந்த ராஜபக்ஷவின் மனைவி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space