நவக்கிரியில் இடம்பெற்ற மூலிகைகளின் கண்காட்சி
வடமாகாணச் சுதேச மருத்துவத் திணைக்களமும், யாழ்.சித்த மருத்துவபீடக் குணபாடத் துறையும் இணைந்து நடாத்திய மூலிகைகளின் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (19.05.2026) காலை-09.45 மணியளவில் நவக்கிரி மத்திய சித்த மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
நவக்கிரி மத்திய சித்த மருத்துவமனை வளாகத்தில் மொத்தமாக 217 வகையான மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்ற நிலையில் 80 வகையான மூலிகைத் தாவரங்கள் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது . கண்காட்சியை ஏராளாமானோர் பார்வையிட்டுப் பயன்பெற்றனர்.