கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் சேக்ஸ்பியர் நினைவு தின நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (22.04.2026) காலை-08.30 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்.நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் சிவசக்தி ஜெயராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.