வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (30.01.2026) மாலை தைமாதப் பிரதோஷ விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அபிஷேகம், விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக வீதி உலா வந்தார்.