2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையானது, தற்போதைய அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்க, 2026-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பிற்குச் செயல்படுத்தப்பட்டது. மேலும், ஆறாம் வகுப்பிற்கான சீர்திருத்தங்கள் 2027-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான தொடர்ச்சியான செயல்முறையைச் செயல்படுத்துவதற்கும், அச்செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும்,அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரhன பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பரிந்துரையைக் கருத்தில் கொண்டு,
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளைக் கொண்ட கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழுவை நியமிக்க அனுமதியளித்துள்ளது.