உடுதும்பறை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவரை உடுதும்பறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடுதும்பறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கஹடலியத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.

அவ்வேளை மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு, புதையல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட நவீன உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

உடுதும்பறை, கஹடலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரு ஆண்களும், 45 வயதுடைய பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் உடுதும்பறை பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.