இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய இழுவை  விசைப் படகுகளின் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளின் போது வடக்கு மீனவர்களின் வலைகளுக்கும் மீன்பிடி உபகரணங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்குதல் தொடர்பில் இதுவரை நடவடிக்கை  எடுக்கப்படவில்லையென கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இழுவை  விசைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளின் போது வடக்கு மீனவர்களுக்கு ஏற்படடுள்ள மில்லியன் கணக்கான பொருட் சேதங்களுக்கு இதுரையில் இழப்பீடு வழங்குவதற்கான பரிசீலிணை குறித்து அரசாங்கம் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.எனினும், இந்த மாத இறுதியில் இலங்கை-இந்திய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. கடந்த முறை பேச்சுவார்த்தை இலங்கையில் இடம்பெற்றது.இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான வகையில் மீன்ப்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளது என்றார்.