அந்தாட்டிக்காவை உள்ளடக்கிய மிகப்பெரிய பனிப்படலத்தின் கீழ் ஒரு மறைக்கப்பட்ட நிலப்பரப்பை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

புதிய நிலப்பரப்பைக் கண்டறிய ஆராய்ச்சி குழு அண்மையில், உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தியதாகவும், அதன்மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்கள் பல்லாயிரக்கணக்கான மலைகள், பாறைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளுடன் கூடிய நிலப்பரப்பை வெளிப்படுத்துகின்றன.இந்தத் தரவு எதிர்கால கடல் மட்ட உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தை கணிக்க உதவும் என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.