தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் 72 புலிகள் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் கால்நடை உற்பத்தி திணைக்களம் நடத்திய முதற்கட்ட சோதனையில், 'கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றினாலேயே இப்புலிகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸ், புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துத் கருத்துத் தெரிவித்த கால்நடைத் திணைக்கள பணிப்பாளர், "புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தபோது நிலைமை கையை மீறிச் சென்றிருந்தது. பூனைகள் அல்லது நாய்களைப் போலன்றி, புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுமார் 240க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டுள்ள குறித்த பூங்கா இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் பூங்கா முழுவதும் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்த புலிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் புலிகளைத் தொட்டுப் பார்ப்பதற்கும் அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த 'டைகர் கிங்டம்' பூங்கா உலகளவில் பிரபலம் என்பதால், இந்தச் செய்தி சுற்றுலாத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
72 புலிகள் திடீர் மரணம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space