ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி இல்லை எனவும், மீறிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோண்டுராஸ் நாட்டின் கொடி ஏந்திய 'ஏதி நோவா' என்ற எரிபொருள் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த கப்பல் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், அமெரிக்க கடற்படைக்கு எரிபொருள் வழங்கியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.
இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பாதையாகும், இது சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மிகப்பெரிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கிறது.
இந்த பாதை மூடப்பட்மையினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது ; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space