சுவிசர்லாந்து பதில் தூதுவர் மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கிடையிலான  விசேட சந்திப்பொன்று இன்று (21) திங்கட்கிழமை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் நடைபெற்றது.இந்த சந்திப்பின்போது  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தற்போதைய இலங்கையில்  அரசியல் சமூக போக்குகள் மற்றும் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இந்த சந்திப்பில் சுவிசர்லாந்து பதில் தூதுவர் ஒலிவவியார் பிராஸுடன் தூதரக காரியாலயத்தின் முதலாவது செயலாளர் ஜெஸ்டின் பொயிலட்டும் கலந்துகொண்டிருந்தாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.