வெனிசுலாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் இராணுவ நடவடிக்கை மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று தமது நிலைப்பாட்டை வெளியிட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பேசிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.