பல தசாப்த கால போரானது உயிர்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரம் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படும் என்பதை கற்பித்துள்ளது. அனைத்து வடிவங்களிலான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உலகளாவிய பதற்றங்கள் நம் அனைவரையும் பாதிக்கின்றன. வல்லரசுகளின் ஒவ்வொரு மோதலும் சிறிய நாடுகளைப் பாதிக்கின்றன.
வர்த்தகம், எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் தடைகள் மக்களின் வாழ்வாதாரங்கள், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
இலங்கை அரசாங்கம் இந்த அபாயங்களை முன்கூட்டியே கணித்து, அவசரகாலத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் இதனால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நமது மக்களைப் பாதுகாப்பதற்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நமது சொந்த மோதலின் இறுதிக்கட்டத்தில் கூட, நிலையான அமைதிக்கான வழியாகப் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தையே இலங்கை நாடியது. உலகம் தனக்குத் தேவையானபோது மட்டும் அக்கறை காட்ட முடியாது.
சாத்தியமான விளைவுகளுக்குத் தயாராவது, கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவது ஆகியவையே நம் நாட்டிலும் நமது பிராந்தியத்திலும் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான மிகவும் பயனுள்ள வழிகளாகும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"வல்லரசுகளின் மோதல் சிறிய நாடுகளைப் பாதிக்கும்" : ஈரான் - இஸ்ரேல் பதற்றம் குறித்து நாமல் ராஜபக்ஷ
Ad Space
Ad Space
Ad Space
Ad Space