சொந்த நாட்டில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக துபாய்க்கு சென்று அங்கு வாழ்ந்துவரும் சமூக ஊடகப் பிரபலங்கள் பலர், இப்போது எப்படியாவது எங்களை மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்!
சமூக ஊடக பிரபலங்களின் நிலை...
பிரான்ஸ் நாட்டு யூடியூபர்கள் முதலான சமூக ஊடகப் பிரபலங்கள் பலர், சொந்த நாட்டில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக துபாய்க்கு சென்று அங்கு வாழ்ந்துவந்த நிலையில், இப்போதுதான் தங்கள் சொந்த நாடு பிரான்ஸ் என்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளதுபோல் தெரிகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, துபாய் மீது ஈரான் தாக்குதல் நடத்த, திகிலடைந்துள்ள அவர்கள், எப்படியாவது தங்களை பிரான்சுக்கு அழைத்துக்கொள்ளுமாறு தற்போது உதவி கோரி அழைத்துவருகிறார்கள்.
அப்படி துபாயில் சென்று குடியமர்ந்துவிட்டவர்களில் ஒருவர், ரியாலிட்டி தொலைக்காட்சி பிரபலமான Maeva Ghenna
இதுவரை நாட்டுப்பற்று தொடர்பில் எதுவுமே பேசியிராத Maevaவுக்கு திடீரென தான் பிரெஞ்சு குடிமகள் என்பது நினைவுக்கு வந்துள்ளது.
பின்னணியில் ஏவுகணைகள் வெடிக்க, கமெரா முன் தனது பிரெஞ்சு பாஸ்போர்ட்டுடன் தோன்றி, பிரான்ஸ் தன்னைக் காப்பாற்றவேண்டும் என சத்தமிடுகிறார் Maeva.
அதேபோல, முன்னாள் மிஸ் பிரான்ஸ் அழகியான Elodie Gossuin துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், தான் மோசமான நாளை சந்தித்துள்ளதாகவும், உதவியற்ற நிலையில் காணப்படுவதாக உணர்வதாகவும் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் எல்லாம் பிரான்சில் வரி செலுத்துவதில்லை, வரிகளுக்கு தப்புவதற்காகவே துபாய்க்குச் சென்று அங்கு ஆடம்பரமாக வாழ்ந்துவருகிறார்கள்.
இப்போது பிரச்சினை என்றதும், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், நாங்கள் பிரெஞ்சுக் குடிமக்கள், எங்களைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள் என்னும் ரீதியில் செய்தி வெளியிட்டுவருகின்றன பிரான்ஸ் ஊடகங்கள்.
வரிகளிலிருந்து தப்புவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற சமூக ஊடக பிரபலங்களின் பரிதாப நிலை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space