சென்​னை​யில் திமுக சார்​பில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்று பேசிய முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு, முதல்​வர் விஜய், அமைச்​சர் நிர்​மல்​கு​மார் ஆகி​யோர் குறித்து கடுமை​யாக விமர்​சித்து பேசி​யிருந்​தார். இதற்கு இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் கண்​டனம் தெரிவித்துள்​ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: “ஆபாசம், அவதூறு, தரக்​குறை​வான பேச்​சு, மிரட்​டல் இவை​தான் அரசி​யல் ஆயுதங்​கள் என்று நினைத்​துக்​கொண்டு செயல்​படும் கட்சி தமி​ழ​கத்​தில் திமுக​வைத் தவிர வேறு எது​வும் இல்​லை.குறிப்​பாக, இறைவனுக்கு சேவை செய்​யும் இந்து சமய அறநிலையத் ​துறை​யின் அமைச்​ச​ராக இருந்த ஒரு​வர், அந்​தப் பதவி​யின் மாண்​பை​யும், பொது வாழ்க்​கைக்​கான குறைந்​த​பட்ச நாகரி​கத்​தை​யும் மறந்​து, வாய்க்கு வந்​த​படி தரக்​குறைவாக பேசுவதும், மாற்​றுக் கட்​சி​யினரை அவம​திப்​பதும், பொது​மக்களையே அச்​சுறுத்​து​வது போன்ற செயல்​களும் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்​படை​யாக காட்​டு​கிறது.அமைச்​சர் பதவி என்​பது அதி​காரத்தை காட்​டு​வதற்​கான பதவி அல்ல. அந்​தப் பொறுப்​பில் முன்பு இருந்த ஒரு​வர் இன்று மூன்றாம் தர அரசி​யல் பேச்​சாளரைப் போல நடந்து கொள்​வது வெட்கக்கேடானது. எங்​களை யாரும் மிரட்​டிப் பணிய வைக்க முடி​யாது. அவதூறுகளுக்​கும் அச்​சுறுத்​தல்​களுக்​கும் நாங்​கள் ஒருபோதும் அஞ்​சப்​போவ​தில்​லை. ஒரு​வர் எவ்​வளவு கீழ்த்தரமாகப் பேசுகி​றாரோ, அதை​விட கீழே இறங்கி பதிலளிப்பது எங்​கள் அரசி​யல் பண்​பாடு அல்ல.எங்​கள் முதல்​வர் அப்​படி எங்​களை வளர்க்​க​வும் இல்​லை. எனவே, வார்த்​தைகளை அளந்து பேசட்​டும். இல்​லை​யென்​றால், அவர்​கள் தொடங்​கிய அதே அரசி​யல் மொழி​யில் பதில் சொல்ல வேண்​டிய சூழ்​நிலையை அவர்​களே உரு​வாக்​கிக் கொள்​வார்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. அமைச்​​சர்கள் கீர்த்​தனா, வினோத் ஆகியோரும் சேகர்பாபு பேச்​சுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்​.