மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசரகால பதிலளிப்புப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக, சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் அப்பகுதியில் வசித்து வருவதைக் கருத்திற்கொண்டு, அவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர கால பிரிவின் முக்கிய நோக்கங்களாக, மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குதல் மற்றும் இப்பிரிவு வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரமும் (24/7) முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் கீழ்க்காணும் இலக்கங்கள் ஊடாக அவசர கால பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்:
அமைச்சின் அவசர கால பிரிவு: +94117445641 அல்லது +94112207250
WhatsApp / Botim (செய்திகளுக்கு மட்டும்): +94777390031
மின்னஞ்சல்: emergency.sl@mfa.gov.lk
கொன்சியூலர் பிரிவு: +94742595546
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்: +94719802822
முழுநேர அவசர இலக்கம்: 198
மத்திய கிழக்கில் உள்ள தமது உறவினர்களின் தகவல்களை அறிய விரும்புவோர் அல்லது அவசர உதவிகள் தேவைப்படுவோர் உடனடியாக இந்த இலக்கங்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய கிழக்கு பதற்ற நிலை ; அவசரகால பதிலளிப்புப் பிரிவை நிறுவியது வெளிவிவகார அமைச்சு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space