காலியில் உரகஸ்மன்ஹந்திய - ஜட்கட பகுதியில் தந்தை தனது மகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
தந்தையின் தாக்குதலில் காயமடைந்த, மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உரகஸ்மன்ஹந்திய, ஜட்கட பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி தகராறு காரணமாக தந்தை மகளை கோடரியால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளை கோடரியால் தாக்கி கொலை செய்த தந்தை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space