இலங்கையில் புதிய பால் விற்பனை, ஒரு மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், பால் நிறுவனங்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில், நுகர்வோர் பால் பவுடரிலிருந்து புதிய பாலுக்கு மாறிவிட்டதாகவும், இதனால் அதிக தேவை உருவாகி வருவதாகவும், நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பால் விவசாயிகள் தற்போது ஒரு லீற்றர் புதிய பாலை 160 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்வதாகவும், அதனையே நுகர்வோருக்கு 430 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.
பண்ணை மற்றும் சில்லறை விற்பனை நிலைகளுக்கு இடையில், இவ்வாறான விலை உயர்வுக்கு என்ன நியாயம். உள்ளூர் சந்தைக்கு வெளியிடுவதற்கு முன்பு நிறுவனங்கள் ஒரே பொருளின் விலையை இவ்வளவு அதிகமாக எவ்வாறு உயர்த்த முடியும்.
தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த நுகர்வோரை இந்தப் பிரச்சினை நேரடியாகப் பாதிக்கிறது என்பதை வலியுறுத்தி, உடனடியாகத் தலையிட்டு ஒரு நிலையான தீர்வை அறிமுகப்படுத்த வேண்டும்.
சில நிறுவனங்கள் தயாரிப்பு காலாவதி திகதிகளுக்கு சரியான கவனம் செலுத்தத் தவறிவிடுவதாகவும், புதிய பால் சந்தையில் விலை நிர்ணயம் மற்றும் தரத் தரங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சை தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
புதிய பால் விற்பனை: நுகர்வோரை சுரண்டும் பால் நிறுவனங்கள்; அசேல சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space