விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதன்கிழமை தோறும் அரச பாடசாலைகள், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம் நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை தோறும் தனியார் பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகளுக்கும் விடுமுறை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space