பிரான்சிலுள்ள பிரபல அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அருங்காட்சியகத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை
கடந்த அக்டோபர் மாதம், பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அந்த சம்பவம் நாடு முழுவதும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருங்காட்சியகத்தின் தலைவரான லாரன்ஸ் (Laurence des Cars) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று, செவ்வாய்க்கிழமை, அவரது ராஜினாமாவை பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் ஏற்றுக்கொண்டார்.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்திற்கு அமைதியும், பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கல் சம்பந்தப்பட்ட முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வலுவான புதிய உத்வேகமும் தேவைப்படும் நேரத்தில், கொள்ளைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று லாரன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைப் பாராட்டியும் உள்ளார் மேக்ரான்.
அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் நிலவும் பாதுகாப்புக் குறைப்பாடுகள் தொடர்பில் லாரன்ஸ் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை: சமீபத்திய தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space