பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 பங்களிப்பு அட்டை வழங்கல்
Ad Space
Ad Space
பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 பங்களிப்பு அட்டை உத்தியோகபூர்வமாக நேற்று 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெற்ற வித்றி சூன் சென் விளையாட்டுத் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை பிரான்சு பொறுப்பாளர் திரு.புவி அவர்கள் பங்களிப்பு அட்டையை வழங்கிவைக்க மாவீரர் குடும்ப உறவுகள், செயற்பாட்டாளர்கள் அதனைப் பெற்றுக் கொண்டனர்.இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு!“ விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற, வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, அவன் தன் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகின்றான். அந்த உன்னதத்தை செய்தவர்களே எங்கள் நெஞ்சங்களில் தெய்வங்களாக குடியிருக்கும் மாவீரர்களாகும்.’’எம் மாவீரர்கள் நாள் நவம்பர் 27 ஆகும். தமிழீழ தேசத்திலும், தமிழர்கள் வாழுகின்ற சர்வதேசமெங்கும் இந்நாளில் எழுச்சியாகவும், உணர்வு பூர்வமாகவும் எம்தேசமக்கள் அதனை நினைவிலேந்துகின்றனர்.பிரான்சு தேசத்திலும் 9 வரையான மாவட்டங்களிலும், பாரிசின் புறநகர் பகுதியில் வாழும் மக்களும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் ( வெள்ளிகிழமை) 91 மாவட்டத்தில் அமைந்துள்ள Le Grand DOme-Yvette மெஸ்சிபலேஸ் என்னும் இடத்தில் எழுச்சியோடு நடாத்துவதற்கான ஏற்பாட்டினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புகளும் செய்து வருகின்றனர். எம் இப்புனிதர்களின் நினைவெழுச்சி நாளினை எமது மக்களின் பெரும் பொருளாதாரப்பங்களிப்புடனே நடாத்தப்பட்டு வருகின்றன.20.09.2026 தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு 6ஆவது நாளில் பாரிசின் புறநகர் பகுதியான வித்திறி சூசென் என்னும் இடத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் மெய்வல்லுநர் போட்டியின் இறுதிநாள் அன்று மாவீரர் வணக்க நிகழ்வுடன் மாவீரர் பொருளாதார உதவி பங்களிப்பு அட்டை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு. புவி அவர்கள் வழங்கி வைக்க 09.01.1997 இல் ஆனையிறவு சமரில் வீரமரணத்தைத் தழுவிய கப்டன் சுபானந்தினி அவர்களின் சகோதரி பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து கட்டமைப்பினர்களுக்கும் பொருளாதர பங்களிப்பு அட்டை வழங்கிவைக்கப்பட்டது.இப் பங்களிப்பே ஆண்டு தோறும் பிரான்சில் வாழும் தமிழீழ மக்களின் தேச உணர்வையும், அந்த நிகழ்வின் எழுச்சியும் சிறப்புடன் செய்வதற்கு பெரும் பலமாகவுள்ளதுடன். நாம் வாழும் பிரான்சு நாட்டினது மக்கள் , மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் நல்மதிப்பையையும், பெருமையையும் பெற்றுக்கொடுத்து வருகின்றது. தமிழீழ மக்களாகிய நாம் வீழ்ந்து விடாத வீரத்துடன் மாவீரர்கள் புகழைப் பாடுவோம், எமக்கு நல்வாழ்வு தந்த அந்த உன்னதர்களை நினைவில் ஏந்துவோம், பங்கெடுப்போம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அன்புரிமையான அழைப்பை விடுத்துள்ளது.
Ad Space
Ad Space