இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்தில் சுகாதாரப் பரிசோதனையை சிங்கப்பூர் தீவிரப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.
சிங்கப்பூரின் நுழைவுப் பகுதிகளில் பயணிகளுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படும், உள்வரும் பயணிகள் பயணத்திற்குப் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படும், மேலும் வெளிச்செல்லும் பயணிகளுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் வழிகாட்டுதல்களை வழங்குவதாக தொற்று நோய்கள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவிலிருந்து புதிதாக வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கண்காணிப்பையும் மனிதவள அமைச்சகம் தீவிரப்படுத்தி வருகிறது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பழம் திண்ணும் வௌவாலின் உமிழ்நீர் படர்ந்த பழங்களை, மனிதர்களாகிய நாம் உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்து கொள்வதன் மூலமாகவோ இந்த நோய்த் தொற்று பரவும்.
2011 முதல் சிங்கப்பூரின் வௌவால்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் தற்போதைய உயிரி கண்காணிப்புத் திட்டங்கள் வைரஸின் இருப்பைக் கண்டறியவில்லை என நிறுவனம்
கு றிப்பிட்டது.
நிபா வைரஸ் பரவல் ; சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரிசோதனை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space