2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இன்னும் நடத்தப்படாத பாடங்களுக்கு, மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் கீழ், மேலதிக வகுப்புகள், பாடவாரியான கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகம், பரீட்சை வினாக்களை ஒத்த உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துதல் போன்ற அனைத்தும் தடை செய்யப்படும்.
இந்த உத்தரவை மீறுவோர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை 2,362 மையங்களில் நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space