நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா!
Ad Space
Ad Space
Ad Space
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது.இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் அழகனவன் அலங்காரக் கந்தனாய் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார்.நேற்றையதினம் சப்பரத் திருவிழா நிறைவுற்ற நிலையில், இன்றையத் தேர்த்திருவிழாவின் பின்னர் நாளையதினம் தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space