தெற்கு கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹிபாலே” என்பவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தெற்கு கடலில் சுமார் 200 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் அடங்கிய பல நாள் மீன்பிடிக் படகுடன் 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதே கடல் பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையின்போது, சுமார் 70 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பல நாள் மீன்பிடி படகுடன் 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அந்த சந்தேகநபர்களிடமிரந்து இரண்டு செயற்கைக்கோள் தொலைபேசிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25) கரைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன் 11 பேர் கைது: பின்னணியில் உள்ளது “தெஹிபாலே” என்பவரா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space