கண்டி சுதுஹும்பொல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் ருவன் குமார தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதுஹும்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கண்டி மாநகர சபை உறுப்பினர் இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தானம் வழங்கும் நிகழ்வில் கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் மீது தாக்குதல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space