இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும், உருவச் சிலைத் திறப்பு விழாவும் எதிர்வரும்-31 ஆம் திகதி சனிக்கிழமை விழாக் குழுவின் ஏற்பாட்டில்  யாழில் இடம்பெறவுள்ளது.

முக்கிய நிகழ்வாக அன்றைய தினம் காலை-09 மணியளவில் அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.