ஜேர்மனியில் அப்பாவி இளம்பெண்ணொருவர் புலம்பெயர்ந்தோர் ஒருவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.வியாழக்கிழமை இரவு, ஜேர்மனியின் Wandsbek-Markt ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ரயில் ஒன்று ரயில் நிலையத்துக்குள் நுழைய, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், தன்னருகே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணொருவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் குதித்துள்ளார்.

அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைய, பயணிகள் கண் முன்னேயே அந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
யார் அந்த இளம்பெண்?


அந்த இளம்பெண் ஈரான் நாட்டவராவார். அவரது பெயர் Fatemeh D. என்றும், குடும்ப வன்முறைக்குத் தப்பி வந்த அவர் ஜேர்மனியிலுள்ள Norderstedt நகரில் பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

 

 

 




Fatemeh ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது, சூடான் நாட்டவரான Ariop A. (25) என்னும் நபர், நான் உன்னையும் என்னுடன் கூட்டிச் செல்கிறேன் பார் என கூறியதாகவும், ரயில் நெருங்கவும், அவரையும் இழுத்துகொண்டு ரயில் பாதையில் குதித்ததாகவும், சம்பவம் நடக்கும்போது அங்கு நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



Fatemehயைக் கொலை செய்த Ariop, ஏற்கனவே வன்முறை சம்பவங்களுக்காக ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

Fatemehயை அவருக்கு முன் பின் தெரியாது என கூறப்படும் நிலையில், அந்த அப்பாவிப் பெண்ணை ஏன் அவர் கொலை செய்தார் என்பது தெரியவில்லை.