: சீ​னா​வின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒரு​வ​னாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்​படம் உலகம் முழு​வதும் வைரலாக பரவி வரு​கிறது.

சீன கம்​யூனிஸ்ட் அரசுக்கு எதி​ராக கடந்த 1989-ம் ஆண்​டில் மாணவர்​கள், தொழிலா​ளர்​கள், கல்​வி​யாளர்​கள் மிகப்​பெரிய போராட்​டங்​களை நடத்​தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள தியானன்​மென் சதுக்​கத்​தில் குவிந்த மாணவர்​களை சீன ராணுவம் ஈவு இரக்​கமின்றி கொன்று குவித்​தது. இதில் சுமார் 10,000-க்​கும் மேற்​பட்​டோர் கொல்​லப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகின.




கடந்த 1989 ஜூன் 5-ம் தேதி தியானன்​மென் சதுக்​கத்​தில் பீரங்​கி​கள் அணிவகுத்து சென்​றன. அப்​போது ஒரு நபர் பீரங்​கி​களுக்கு முன்​பாக துணிச்​சலாக முன்​னேறி​னார். அந்த நபரை ராணுவ வீரர்​கள் அடித்து உதைத்து இழுத்​துச் சென்​றனர்.

உயிரை விழுங்​கும் ராணுவ பீரங்​கி​களுக்கு எதிரில் நெஞ்​சில் உரத்​தோடு எதிர்ப்​பினை பதிவு செய்த முகமற்ற அந்த நபரின் புகைப்​படம் உலகம் முழு​வதும் வெளி​யாகி மிகப்​பெரிய எழுச்​சியை ஏற்​படுத்​தி​யது. அவர் டேங்க் மேன் என்று அழைக்​கப்​படு​கிறார்.

ஈரானில் ஜென் இசட் போராட்​டம்: இதேபோன்று ஈரான் ராணுவத்தை தனி ஒருவனாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஈரானில் அயத்​துல்லா ரூஹோல்லா கொமேனிக்கு பிறகு பிறகு 1989-ல் அயத்​துல்லா அலி காமேனி அந்நாட்டின் மதத் தலை​வ​ராக பதவி​யேற்​றார். தற்​போது அவரே ஈரானின் உச்ச தலை​வ​ராக நீடிக்​கிறார்.








அமெரிக்கா உடனான மோதல் காரண​மாக ஈரான் மீது பல்​வேறு நாடு​கள் பொருளா​தார தடைகளை விதித்​துள்​ளன. இதன்​ காரண​மாக ஈரானில் அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை 72 சதவீதம் வரை உயர்ந்​திருக்​கிறது. மருந்​துகளின் விலை 50 சதவீதம் வரை அதி​கரித்​திருக்​கிறது. சுமார் 24 சதவீத இளைஞர்​கள் வேலை​வாய்ப்​பின்றி பரி​தவித்து வரு​கின்​றனர். மக்​கள் மீதான வரிச்​சுமை 62 சதவீத​மாக அதி​கரித்​திருக்​கிறது. கடுமை​யான பொருளா​தார நெருக்​கடி​யில் ஈரான் சிக்​கித் தவித்து வரு​கிறது.

இந்த சூழலில் ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த மாதம் 28-ம் தேதி தலைநகர் தெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. ஜென் இசட் இளைஞர்​கள் (1997 முதல் 2012-க்​குள் பிறந்​தவர்​கள்) தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்​கி​யான் பதவி விலக கோஷமிட்​டனர்.