சிறிலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழரசுக்கட்சி அவசர கோரிக்கை!
Ad Space
Ad Space
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை சம்பந்தமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,26 வயதான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபிய இராச்சியத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞனை விடுவிப்பதற்கும் அவருக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுப்பதற்குமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உங்களுடன் ஓர் அவசர சந்திப்பைக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.மேலும், பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரால் அறிவிக்கப்பட்டவாறு சவூதி அரேபியா செல்லவுள்ள தூதுக்குழுவில் எமது பிரதிநிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் அனோஜன் விவகாரம் உட்பட வட,கிழக்கு அன்றாடப்பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளைப் பெறுவதற்காக தமிழரசுக்கட்சியின் எம்.பிகள் சார்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில் குறித்த சந்திப்பு நாளையதினம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Ad Space
Ad Space