பொகவந்தலாவை - செப்பல்டன் பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று புதன்கிழமை (11) பகல் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 38, 42 மற்றும் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: உபகரணங்களுடன் மூவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space