சிறிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யக்குரே பிரதேசத்தில் சனிக்கிழமை (24) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 52.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய சுமார் 70 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவராவார்.குறித்த நபர் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, சிறிபுர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space