கொழும்பு - டுபாய் இடையிலான பிட்ஸ்எயார் விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Ad Space
Ad Space
Ad Space
மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாகக் கொழும்பு மற்றும் டுபாய் இடையிலான தமது விமானச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பிட்ஸ்எயார் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.இவ் இடைநிறுத்த நடவடிக்கை கடந்த 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பிராந்தியத்தின் தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்நிலைமை தமது விமானச் சேவைகளின் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பிட்டு வருவதாகவும் பிட்ஸ்எயார் சுட்டிக்காட்டியுள்ளது.தற்போதைய திட்டமிடலின்படி, வரும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் கொழும்பு – டுபாய் இடையிலான விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.எனினும், அக் காலப்பகுதியில் நிலவும் சூழல் மற்றும் பிராந்திய அபிவிருத்திகளுக்கு அமைவாகவே இறுதி முடிவெடுக்கப்படும் என பிட்ஸ்எயார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space
Ad Space