பதுளையில் பிபில - ரதலியத்த பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிபில ரதலியத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான காதலன் காயமடைந்த நிலையில் தற்போது பிபில வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் பிபிலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனால் பெண் படுகொலை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space