கஹதுடுவ அதிவேக வீதியில் இடைமாறல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (10) மாலை கஹதுடுவ அதிவேக வீதி பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 34 கிராம் 95 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மந்நும் 19 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் அக்கும்புர மற்றும் கல்ஹின்ன பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space