கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை - ரிகில்லகஸ்கடை வீதியின் 18ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலஹா பகுதியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றபோது லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கண்டி பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கலஹா பகுதியில் விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space