கந்தரோடை விகாரையை நேரில் சென்று பார்வையிட்டார் புத்தசாசன அமைச்சர்!
Ad Space
Ad Space
Ad Space
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரைக்கு நேரில் சென்று அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் தொன்மையான சமய மற்றும் கலாசார மரபுகளையும், அவற்றுடன் தொடர்புடைய தொல்பொருள் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.அந்த வகையில், கந்தரோடை விகாரை வளாகத்தில் காணப்படும் தொல்பொருள் நினைவுச் சின்னங்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவிகவனம் செலுத்தினார்.குறிப்பாக, இவ்விகாரை வளாகத்தின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெறுமதியை எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாத்து வழங்குவதுடன், அங்கு சமய நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.மேலும், கந்தரோடை விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து அமைச்சர் விரிவான தகவல்களையும் பெற்றுக்கொண்டார்.இதேவேளை, இந்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்கிரமசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space
Ad Space