எதிமலை - கொட்டியாகலை, கெபிலித்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (09) கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கஞ்சா பண்ணை சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது. சுமார் 02 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா பண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 06 அடி 10 அங்குல உயரம் வரை வளர்ந்திருந்த 55,220 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா செய்கை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக எதிமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 34 வயதுடையவர் எனவும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிமலையில் கஞ்சா தோட்டம் முற்றுகை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space