உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது. உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. சுகா​தா​ரம் தொடர்பான தகவல்​கள், அவற்றை பகிர்ந்து கொள்​ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்​பான எச்​சரிக்கை வெளி​யிடு​தல் போன்ற நடவடிக்​கைகளை உலக சுகா​தார அமைப்​புடன் நிறுத்​திக் கொண்​ட​தாக அமெரிக்க அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர். இதன் மூலம் இந்த அமைப்​புடன் அமெரிக்கா​வுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்​துள்​ளது.

130 மில்​லியன் டாலர் பாக்கி: இதற்​கிடை​யில், கடந்த 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான தொகை 130 மில்​லியன் டாலரை அமெரிக்க வழங்க வேண்டியுள்​ளது என்று உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது. அமெரிக்​கா​வின் இந்த முடிவால் உலகள​வில் ஏற்​படும் நோய் பரவல், விஞ்​ஞானிகளின் பங்​களிப்​பு, மருந்து நிறுவனங்​கள் தடுப்​பூசி தயாரிப்​பது போன்ற பணி​கள் கடுமை​யாக பாதிக்​கும் என்று ஜார்ஜ் டவுண் பல்​கலைக்​கழக பொது சுகா​தார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்​டின் கவலை தெரி​வித்​துள்​ளார்.

என்​னுடைய வாழ்நாளி​லேயே மிக பேரழி​வான முடிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்​துள்​ளார் என்று லாரன்ஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இத்​தனைக்​கும் உலக சுகா​தார அமைப்பை தொடங்​கும் முயற்​சியை முன்​னெடுத்​தது அமெரிக்​கா​தான். அதே​போல், இந்த அமைப்​புக்கு அதிக நிதி​யுதவி வழங்​கு​வதும் அமெரிக்​கா​தான். ஆண்​டுக்கு சராசரி​யாக 111 மில்​லியன் டாலரை இந்த அமைப்​புக்கு அமெரிக்கா வழங்​கு​கிறது.