ஈரான் ஜனாதிபதிக்கு ( Masoud Pezeshkian ) எவ்வித உயிராபத்துக்களுமில்லையெனவும் அவர் பாதுகாப்பாகவுள்ளார் எனவும் ஈரானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் சனிக்கிழமை (28) திறந்த மோதலாக வெடித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த நடவடிக்கை “The Shield of Judah” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த கூட்டு ராணுவ நடவடிக்கை (Joint Military Operation) என விவரிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வரை ஈரானில் 30 முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே ஈரானிய ஊடகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஜனாதிபதிக்கு உயிராபத்தில்லை - ஈரானிய ஊடகம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space